மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற அதிநவீன இலத்திரனியல்; கருவிகளால் சூழல் மாசடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பா கண்டத்தில் கார்களை விடவும் மைக்ரோவேவ் ஓவன்களால்தான் சுற்று சூழல் அதிகளவில் பாதிப்படைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சுற்றுச்சூழல் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஆண்டுக்கு 70 லட்சத்து 70 ஆயிரம் தொன் காபன்டை ஒக்சைட் வாயுவை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளதாகவும் அது 68 லட்சம் கார்கள் வெளியேற்றும் காபன்டை ஒக்சைட் நச்சு புகைக்கு ஈடானதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.