168
அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றார் சிவகார்த்தியேன். கடந்த வாரம் ரவிக்குமாரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் தற்போது விக்கிகேஷ் சிவனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்,’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வரவேற்புடன் இப்படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது.
பெயரிடப்படாத இப்புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கின்றார். ஏற்கெனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருந்தார். அது விக்னேஷ் சிவன் படத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.தற்போது சிவகார்த்திகேயன் பொன்.ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இதைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு தி்ரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love