உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து லெபனானுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 10 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை காலையில்; சிரியாவுக்கும் லெபனானுக்கும் இடையில் உள்ள பனிமலையைக் கடந்து சென்றபோது பனிப்புயலில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த குறித்த பகுதிக்குச் சென்ற மீட்புக்குழுவினர் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் செல்லப்பட்டனர். அவர்களிலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் 6 பெண்களும் உஒள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அகதிகளை கடத்த முயன்றதாக சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து லெபனானுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 10 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தனர்…
156
Spread the love
previous post