புத்த மதத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித தலமாகவும் தலாய்லமா தங்கியிருக்கும் புத்தகயா கோவிலில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள புத்தகயாவில் திபெத்திய மத தலைவர் தலாய்லமா தங்கியிருந்து தனது ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வருகினறார். இந்நிலையில் நேற்றரவு அவர் தனது கடமைகளை முடித்து விட்டு தனதுஅறைக்கு சென்றநிலையில், அவரின் அறைக்கு அருகே 2 உள்ளூர் தயாரிப்புக்களான 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன் மேலும் வெடிகுண்டுகள் உள்ளதா என புத்தகயா முழுவதும் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த2013 ஆம் ஆண்டு ஜூலைமாதம் புத்தகாய வளாகத்தில் 10 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதழல் பலர் காயமடைமந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது தலாய்லாமாவை குறிவைத்து இத் தாக்குதல் நோக்குடன் இந்தக் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. ஏற்கனவே சீனா தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க கூடாது என இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது