கதிர்காமம் நகரில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 63 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய காரணத்தினால் 44 வயதான ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையினை தொடர்ந்து 63 பேர்கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை திஸ்ஸமஹராம நீதவான் முன்னிலையில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளர்h.
இதேவேளை , துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் காவல்துறை உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 3 கதிர்காமத்தில் பதற்ற நிலைமை – 63 பேர் கைது
Published on: Jan 21, 2018 @ 14:31
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கதிர்காமத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய காரணத்தினால் இவ்வாறு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற 44 வயதான நபர் ஒருவர் காவல்துறையினரின் உத்தரவினை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்களை நடத்திய 63 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 15 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 2 கதிர்காமத்தில்; காவல்துறையினரின் துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி – வன்செயல்கள் தொடர்பில் 58 பேர் கைது
Jan 21, 2018 @ 12:13
கதிர்காமத்தில்; 13 பெண்கள் உட்பட 58 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கதிர்காமத்தில் நேற்றிரவு மறித்தும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாக தெரிவித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 44 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
துப்பாக்கிசூட்டு சம்பவத்தினை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையிலேயே அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, கதிர்காமம்காவல்; நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த வன்செயல்கள் தொடர்பிலேயே 58 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கதிர்காமத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Jan 21, 2018 @ 03:04
கதிர்காமத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 44 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகவும் இதனால் காவல் நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் மேலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த துப்பாக்கசூட்டு சம்பவத்தினை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது