Home சினிமா செல்வராகவன், சூர்யா, யுவன். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சூரியாவின் புதிய படம்!

செல்வராகவன், சூர்யா, யுவன். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சூரியாவின் புதிய படம்!

by admin


செல்வராகவன், சூர்யா, யுவன் சங்கர் ராஜா இணையும் பெயரிடப்படாத புதிய படம் பேசப்படும் ஒரு படமாக அமையும் என்றும் சூர்யாவுக்கு முக்கியமான திரைப்படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. புத்தாண்டு அன்று இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் ஒப்படத்தில் சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் நாயகிகளாக நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கான இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் – யுவன் கூட்டணிக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதால் இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பேசப்படும் என்று நம்பப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More