தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து விலகப் போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்க அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் இதனால் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரியதாகவும் பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் தனது மகளை அனுமதிப்பதற்காக, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஊவா மாகாண முதலமைச்சரின் கடிதத்துடன் அதிபரைச் சந்திக்க நிலையில் அதிபர் அந்தக் கடிதத்தினை நிராகரித்தமைக்காகவே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதனை மறுத்துள்ள சாமர சம்பத் தசநாயக தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.