ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆயுதாரிகள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபுல் நகரின் மையப்பகுதியில் உள்ள இன்டர்கொன்டினென்ட்டல் நட்சத்திர ஹோட்டலில் நேற்றையதினம் உள்நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தமையினால் ஹோட்டலின் ஒரு பகுதி தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற இராணுவத்தினருக்கும் துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் சுமார் 13 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்திருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தேரின் எண்ணிக்கை தற்பொழுது 43 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆப்கான் காபூல் இண்டர்கொன்டினன்ரல் விடுதிக்குள் தாக்குதல் ஐவர் பலி – 150 விருந்தினர்கள் மீட்பு:-
Published on: Jan 21, 2018 @ 04:23
ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகள் பிடியிலிருந்த 150 ஹோட்டல் விருந்தனர்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஆயுதாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்த 150 விருந்தினரை சில மணித்தியாலங்கள் ஆயுததாரிகள் பணயமாக வைத்திருந்தனர். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினரை ஆயுதாரிகளின் பிடியிலிருந்து படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு விருந்தினரை மீட்கும் முயற்சியின் போது ஐந்து சிவிலியன்களும், மூன்று ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ‘இண்டர்கொன்டினன்ரல் விடுதிக்குள் புகுந்து நான்கு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும ராணுவத்தினருக்கும் துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு துப்பாக்கிதாரிகளில், மூன்று பேரை ராணுவத்தினர் கொன்றுவிட்டதாகவும் மற்றைய நபரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை விடுதியின் உள்ளே புகுந்த துப்பாக்கிதாரிகள், அங்கு தங்கியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டத்துடன் எறி குண்டுகளையும் வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
குறித்த விடுதியில் மாகாண அதிகாரிகள் கலந்துகொண்ட மகாநாடு இடம்பெற்றதாகவும் . துப்பாக்கிதாரிகள், சிலரைப் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள விடுதிகள்; குறித்து அமெரிக்க தூதரகம் ஒரு எச்சரிக்கையை விடுத்த சில நாட்களில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.