இலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு பல்வேறு புதிய நிகழ்ச்சித்திட்டங்களினூடாக உதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் சூலமனி சட்சுவான் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் தெரிவித்துள்ளார்.
அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம் உள்ளிட்ட விவசாயத்துறைக்கான நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதி தாய்லாந்து அரசாங்கத்துடன் கட்டியெழுப்பியுள்ள நட்புறவை அடிப்படையாகக்கொண்டு தாய்லாந்து மன்னரின் பணிப்புரைக்கமைய இந்த உதவியை இலங்கைக்கு வழங்குவதாக தூதுவர் குறிப்பிட்டார்.