155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். சிட்னியின் வடமேற்கு பகுதி நகரான ரிச்மன்ட்டில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரின் கால் முறிந்துள்ளதுடன் மேலும் 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
புகையிரதம் ஏன் நிறுத்தப்படவில்லை என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிட்னி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கயாமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love