196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை மா அதிபர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைகளையே நிறைவேற்றி வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். தற்பொழுது பதவி வகிக்கும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒரு பக்கச்சார்பாகவே செயற்பட்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் காவல்துறை மா அதிபர் நடுநிலையாகவே செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Spread the love