தமிழக முன்னாள முதலமைச்சர் ஜெயலலிதாவோடு மாறுபட்ட கருத்து இருந்தாலும் பல நேரங்களில் தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக்கொடுத்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்
திருப்பூரரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகம் தற்போது அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது எனவும் அங்கு தற்போது நகைச்சுவை ஆட்சி நடக்கிறது எனவும் தெரிவித்த அவர் ஜெயலலிதா பல நேரங்களில் தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக்கொடுத்தது இல்லை எனவும் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தாரைவார்த்து கொடுக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
67 சதவிவீதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். பல தவறுகளை இவர்கள் செய்துகொண்டு மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளார்கள். ஜி.எஸ்.டி.இ பண மதிப்பு நீக்கம் ஆகிய நடவடிக்கைகளால் பல தொழிற்சாலைகள் இன்றைக்கும் திருப்பூரில் மூடக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. நாம் யார் என புரிந்து கொண்டால் தான் அது தமிழகத்துக்கான விடியலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2-ஜி அலைக்கற்றை வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு எனவும் பொய்யான வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முடியாததால் நீதிபதி தங்களை விடுதலை செய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்