பிஹாரில் வரதட்சிணை – குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரச்சாரம் 4 கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி இந்தியாவின் பிஹாரில் வரதட்சிணை மற்றும் குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரச்சாரத்தை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த காந்தி ஜெயந்தியின்போது ஆரம்பத்திருந்தார். இந்த சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நிதிஷ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றதன் ஒரு பகுதியாக அவரது தலைமையில் பிஹாரில் நேற்று விழிப்புணர்வு மனித சங்கிலி அமைக்கப்பட்டது.
பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆரம்பித்து வைத்த மனித சங்கிலி பல்வேறு நகரங்கள், கிராமங்களில் 13ஆயிரத்து 688 கி.மீ. தூரம் இடம்பெற்றதாகவும் மனித சங்கிலியில் 4 கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்ட ஆளில்லா சிறு விமானங்கள் மூலம் மனித சங்கிலி படம் பிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பித்தக்கது