கொங்கோவில் ஜனாதிபதி ஜோசப் கபிலாவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோசப் கபிலா பதவிக்காலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவடைந்து விட்ட நிலையில் அவர் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றார்.
இந்த நிலையில் அவரை பதவி விலக கோரி கொங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போதே ராணுவத்தினர் கண்ணீப்பிரயோகம் மேற்கொண்டதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதன்போது பலர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை கொங்கோவின் சக்திமிக்கதாக கருதப்போடும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றே நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.