இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்களே ஆண்டு வருவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பொருளாதார நடவடிக்கைகள், இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் அவர்களினால் உருவாக்கப்பட்ட சொத்து மதிப்பு 20.9 லட்சம் கோடி ரூபாய் எனவும் இது இந்திய மத்திய அரசின் 2017-18 வரவுசெலவுத்திட்டத்துக்கு நிகரான தொகை எனவும் சுட்டிக்காட்டப்படட்டுள்ளது.
மேலும் இதில் 37 சதவிகிதம் பேர் குடும்ப சொத்துக்களின் மூலம் பணக்காரர்களானவர்கள் எனவும் ஏற்கனவே சொத்து வைத்துள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் அதிக வருவாய் ஈட்டும் சூழல்களை உருவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.