காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீ நகர் லிண்டன் ஹோல் பப்ளிக் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஐந்து வயது சிறுமி ஜன்னத், தனது தந்தையின் உதவியுடன் ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமையை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியுள்ளார்.
தால் ஏரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் போத்தல்கள் முதலிய பல்வேறு குப்பைகளை தால் ஏரியினுள் வீசி விட்டுச் செல்லுகின்றனர். இதனால், தால் ஏரியின் அழகு மிகவும் பாதிப்படைந்துள்ளது. தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குப்பைத்தொட்டியினுள் குப்பைகளை போடவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி ஜன்னத் கூறுகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து தால் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த ஏரியை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறுமி ஜன்னத்தை பாராட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.