இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.ஊரெழு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞர் உயிரிழப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்து உள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். குறித்த விபத்து சம்பவம் பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

பலாலி வீதி வழியாக மிக வேகமாக யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் , வீதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த தனியார் பேருந்தை முந்திசெல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த ‘ கப் ‘ ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான 25வயது மதிப்புடைய இளைஞர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.