இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – சிறுமி கேஷனாவின் உயிரை பறித்த கடற்படை வாகன சாரதி கைது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவத்தில், கடற்படை கவச வாகனத்தைச் செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றிய  ஊர்காவத்துறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு.

Jan 24, 2018 @ 03:33

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த திருலங்கன் கேஷனா (வயது 09) எனும் மாணவியே விபத்தில் உயிரிழந்தவராவார்.

ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி, இன்றைய தினம் பாடசாலைக்கு மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று உள்ளார். அதன் போது புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடற்படை முகாம்களுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் (பவள்) மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை குறித்த கவசவாகனம் மிக வேகமாகவே வீதிகளில் பயணிப்பதாகவும் , குறிப்பாக இரவு வேளைகளில் ஒரு பக்க விளக்குடன் (ஹெட் லைட்) பயணிப்பதாகவும் , அதனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையால் வாகனத்தை கவனமாக செலுத்த வேண்டும் என ” கோதம்பர ” கடற்படை முகாம் அதிகாரியிடம் தாம் கோரியும் அவர்கள் கவனத்தில் எடுக்க வில்லை என ஊரவர்கள் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.