குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கோதபாய ராஜபக்ஸவிற்கும் எதிராக வழக்குத் தொடருமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களை சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்து அதற்கான கட்டணங்களை செலுத்தவில்லை என மஹிந்த மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அவன்ட் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனம் என்பன தொடர்பிலான சர்ச்சைகளுடன் தொடர்புபட்டதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இருவருக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.