குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெறுமதியாக முதிரை மரக்குற்றிகள் கிளிநொச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (24) அதிகாலை மூன்று மணியளவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றுக்கு கடத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபரின் விசேட அணியினரால் மேற்குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேக நபர்கள் இரண்டு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியின் காடுகளில் பெறுமதியான முதிரை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு நகருக்கு கடத்தப்பட்டு வருகின்றமை தொடர்ச்சியாக பல தரப்பட்டவர்களாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேற்படி மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றபட்ட மரக்குற்றிகளின் பெறுமதி நான்கு இலட்சத்திற்கும் அதிகம என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமான மணல் ஏற்றிய நிலையிலும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.