குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைதி காக்கும் படையினர் தேவையான சந்தர்ப்பங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களை வெற்றிகொள்ள படையினர் அதிகாரத்தை பயன்படுத்த தயங்க வேண்டியதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொடி மற்றும் நீல தலைக் கவசத்தை தொடர்ந்தும் பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சுமார் 200 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.