190
லிபியாவில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட கார்க்தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். லிபியாவின் பெங்காஷி நகரில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புபடையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் பொதுமக்களும் காவல்துறையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ ந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love