குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊவா மாகாண கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண ஆளுனர் எம்.ஜீ.ஜயசிங்க முன்னிலையில் செந்தில் தொண்டமான் மாகாண தமிழ் கல்வி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, நீர் விநியோக மற்றும் கூட்டுறவு அமைச்சராக செந்தில் தொண்டமான் கடமையாற்றி வருகின்றார்.
பதுளை மாவட்ட பாடசாலை ஒன்றின் அதிபரை மண்டியிடச் செய்ததாக மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான சாமர சம்பத் தசாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சாமர சம்பத் தசாநாயக்க கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறி;பிடத்தக்கது