194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ராஜாப்டீன் பதவி விலகியுள்ளார். தேசிய அமைப்பாளர் மற்றும் தேசிய நீர் விநியோக சபையின் உபதலைவர் ஆகிய பதவிகளிலிருந்து ரஜாப்டீன் பதவி விலகிக் கொண்டுள்ளார். இன்று காலை ரஜாப்டீன் பதவி விலகினார் என கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
முகநூல் ஊடாக அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் விளக்கம் கோரியதனைத் தொடர்ந்து, ரஜாப்டீன் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love