168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைய தளத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலருக்கு எதிராக இந்த அறிக்கையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love