எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள 2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக அது இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. மேலும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிய நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு மாத்திரமே 2018 – கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது