ஆசனப் பாதுகாப்புப் பட்டி அணியாததால் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறி சென்னையில் மகிழுந்து ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. சென்னை திருவான்யூரில் மணிகண்டன் என்ற மகிழுந்து ஓட்டுநரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது வாகன சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்து காவல்துறை உறுப்பினர் விஜயகுமார், மற்றும் தாமரை செல்வன் ஆசனப் பட்டி அணியவில்லை என்று தெரிவித்து குறித்த ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது, காவல்துறையினரின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டது.