191
எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தினை அதிகரிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் எல்லைதாண்டி வந்தமைக்காக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதமாக குறைந்தபட்ச தொகையாக 15 லட்சம் விதித்து வந்தது. தற்போது இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக அபராதம் விதிக்கும் வகையில் குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சர்வதேச மீன்பிடித்தல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டள்ளது.
Spread the love