உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை எனவும் வழக்குகளை ஒதுக்குவதில் தீபக் மிஸ்ரா பாரபட்சமாக செயல்படுவதாகவும் சிரேஸ் நீதிபதிகள் 4 பேர் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் இதுபற்றி ஏனைய எதிர்க்கட்சிகளுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளர்.
பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத நிலையில், நிர்வாகத்தை சீர் செய்ய வேறு வழி இல்லை எனத் தெரிவித்த அவர் ஜனவரி 29-ம் திகதி நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது எனவும் அதற்குள் அதற்குள் விஷயம் தெளிவாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.