”நாட்டின் முக்கிய நிறுவனங்களின் உயர் உபதவிகளில் தமது குடும்பத்தாரை நியமித்து, குடும்ப ஆட்சிக்கு முன்னுரிமையளித்து, அரச சொத்துக்களை திருடி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குடும்ப ஆட்சியை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்க மக்கள் தயாராக இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கி, நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல மக்கள் தயாரில்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த வகையில் தூய்மையான பிரதேச சபைகளை அமைத்து எதிர்காலத்தில தூய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படாத அனைத்து வாக்குகளும் ஊழல், மோசடி, களவு, வீண்விரயம் நிறைந்த ஆட்சியை நாட்டில் மீள உருவாக்குவதற்கு துணைபோவதாக அமையும்” என சுட்டிக்காட்டி உள்ளார்.