குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 150 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் காணப்படும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 150 தீவிரவாதிகள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிரியாவின் தென்கிழக்கு மாகாணமான டெய்ர் அல் சூரின் அல் சாபாவில் இந்த தாக்குதல் நடத்தப்டப்பட்டுள்ளது. அமெரிக்கப் படையினரின் இந்த தாக்குதலில் சிவிலியன்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கண்காணிப்பாளர்கள் தெரிவி;க்கின்றனர்.
எவ்வாறெனினும், அமெரிக்காவின் இந்த வான் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் ஐ.எஸ் தீவிரவாத தரப்புக்கள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த 98 வீதமான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.