குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னின் பிராந்தியமான கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் (Carles Puigdemont )மீளவும் நாடு திரும்பக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கடட்லோனிய பாராளுமன்றில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் பங்கேற்கக்கூடிய சாத்தியம் உண்டு.
பிரிவினைவாதத்தை தூண்டியதாகவும், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும் கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ளஸ் நாடு திரும்பினால் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.