இலங்கையின் புதிய சட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் எடாபடி பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரியளவில் அபராத் தொகை விதிக்கும் வகையில் இலங்கையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரினையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டமானது இந்திய தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய சட்டமூலம் குறித்து தமிழக தலைவர்கள் கொதிப்பு ஒரே பார்வையில் தமிழகம்…
Jan 25, 2018 @ 11:21
கச்சதீவு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டமூலம் மனித உரிமை மீறலான செயற்பாடாகும் என தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இலங்கையில் எல்லை கடந்து வந்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்த அவர் காற்றின் வேகம் காரணமாக படகுகள் எல்லை தாண்டி செல்வதற்கு மீனவர்கள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அபராதத்தின அதிகரிக்கும் புதிய சட்டமூலம் மனித உரிமை மீறலாக அமைவதுடன் இந்திய மீனவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது எனவும் குறித்த சட்டத்தினை மீளப் பெறவேண்டும் எனவும் தெமரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியறுத்த வேண்டும் என, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நட்பு நாடு எனக் கூறிக் கொண்டு கும்பிட்டுக் கொண்டே முதுகில் கோடரியைப் பாய்ச்சுவதைப் போல தமிழக மீனவர்களைக் குறி வைத்து மனித நேயமற்ற ஒரு சட்டமூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைமீறி வந்து வந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்வதுடன் அபராத்தினையும் 50 லட்சம் ரூபாய் முதல் 7.24 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டமூலம் நேற்றையதினம் இலங்கை நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.