200
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத் திரைப்படத்தில் விஜய், எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளில் இந்தத் திரைப்படம் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் சாதனையை இப் படம் தனதாக்கியது. தற்போது 100ஆவது நாள் தாண்டி திரையரங்கில் ஓடி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்தத் திரைப்படம் அண்மையில் இந்தியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பானபோதும் சென்னையில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் தினமும் ஒரு காட்சி திரையிடப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் செயலாளர் ஹேமா ருக்மணி, மெர்சல் 100ஆவது காண்பதை முன்னிட்டும் அதன் வசூல் சாதனையை முன்னிட்டும் ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Spread the love