குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மேற்கொண்ட அடையாள வேலை அடையாள வேலை நிறுத்தம்; நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து பிற்பகல் 1 மணியுடன் குறித்த அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டள்ளது
இணைப்பு 2 – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தம்
Jan 30, 2018 @ 03:54
தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்கக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வை அதிகாரிகள் வழங்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் மற்றும் மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் சில பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகக் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு தழுவிய பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை
Jan 25, 2018 @ 16:54
நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் 30ம் திகதி இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நியாயமான தீர்வுகளை வழங்கத் தவறினால் நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் மற்றும் மருத்துவர்கள் எதிர்நோக்கி வரும் சில பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கத் தவறினால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நிச்சயமாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.