குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் குழப்ப நிலைமைகளை உருவாக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை வேறு ஓர் கட்சிக்கு வழங்குவதன் மூலம் அரசியல் குழப்ப நிலைமை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது அரசாங்கத்திற்கே உள்ளுராட்சி மன்றங்களையும் நிர்வாகம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் கிராமங்களையும் அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியம் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு ஒர் கட்சிக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கினால் அந்த கட்சி அபிவிருத்திப் பணிகளை உதாசீனம் செய்யக் கூடும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.