140
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கெதிரான வழக்கினை எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துகொள்ளவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திவிநெகும திட்டத்தின் மூலம் 2991 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பசில் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டு தொடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றையதினம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love