இந்தியாவின் காஷ்மீரில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் திட்டத்துடன் வந்த தற்கொலைக் குண்டுதாரி என கருதப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இன்று குடியரசு நடைபெற்ற நிலையில் கடந்த 23-ம் திகதி புலனாய்வுத் துறையினரால் ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதில் காஷ்மீரில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் மீதோ அல்லது அந்த இடத்தின் அருகாமையிலோ வெளி மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் மனித குண்டு தாக்குதலில் ஈடுபடலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த ஒரு இளம்பெண்ணை கைது செய்துள்ளதாகவும் இவர் தாக்குதல் நடத்துவதற்காக புனே நகரில் இருந்து காஷ்மீர் வந்துள்ளதாக தெரிகிறது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் முழுமையான விபரங்கள் கிடைத்த பின்னர் இதுதொடர்பாக விரிவான விளக்கம் வழங்க்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.