பத்மாவத் திரைப்படத்தை எதிர்த்து வன்முறைப் போராட்டங்களைத் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக தெரிவித்து ஸ்ரீ கர்னி சேனா அமைப்பின் தேசிய செயலர் சூரஜ் பால் அமு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கைது அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட நிலையில் 4 நாள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் 31 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 18 பேர் மீது பேருந்துகளை எரித்தமை மற்றும் பாடசாலை பேருந்து மீது கற்களை வீசியமை தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சூரஜ் பால் அமு கைது செய்யப்பட்டதன் பின்னர் தற்போது குர்காவோன் பகுதியில் அமைதி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது