குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குர்திஸ் படையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan ) தெரிவித்துள்ளார். குர்திஸ் படையினரை வட சிரியாவிலிருந்து ஈராக் வரையில் விரட்டியடிப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். துருக்கியின் அங்காராவில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருக்கும் மான்பிஜ் பகுதியில் உள்ள குர்திஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது அமெரிக்காவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.