குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருளாதாரம் மற்றும் நீதி ஆகிய இரண்டு விடயங்களையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தல் ஆகிய விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் வரையில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். திறைசேரியின் நிதி நிலைமை, அரசாங்க வருமானம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் குறித்து கண்காணித்து ஜனாதிபதிக்கு அது குறித்து அடிக்கடி அறிவிக்கப்பட உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சட்டத்தை அமுல்படுத்தும் விடயங்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.