குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. இராணுவத்திற்கும் இராணுவப் படையினருக்கும் அவமரியாதை செய்யும் வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. படையினரின் மனோ திடத்தை சீர்குலைக்கும் வகையிலும் படையினரை திசை திருப்பும் வகையிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்க்பபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில் படையினர் வெளிநாடுகளில் பணியாற்றும் போது கிடைக்கும் கொடுப்பனவு, ஊனமுற்ற படைவீரர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்டன தொடர்பில் பிழையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகள், பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. எனவே படையினரின் நன்மதிப்பிற்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான பிரச்சாரங்களில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.