பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலீபான் மற்றும் ஹக்கானி குழு தீவிரவாத தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் முழுவதிலும் நடத்தி வருகின்றனர். தாக்குதலை மேற்கொண்டு விட்டு அயல் நாடான பாகிஸ்தானுக்கு அவர்கள் சென்று விடுவதாகவும்வும் இது குறித்து பாகிஸ்தான நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது.இந்த தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டு அமெரிக்க ராணுவத்தினர் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்றைதினம் இந்த அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.