அமெரிக்க குடியரசுக்கட்சியின் நிதித்தலைவரும், தொழிலதிபருமான ஸ்டீவ் வின் தனது பதவி விலகியுள்ளார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
தனது அலுவலக பெண் பணியாளரை கட்டாயப்படுத்தி உறவுக்குட்படுத்தியதாகவும் மற்றும் வேறு பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் எனவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டீவ் வின் பதவிவிலக வேண்டுமென வேண்டும் அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தார். இந்தநிலையில் எதிர்ப்புகள் பலமாக எழுந்தததன் காரணமாக அவர் பதவி வியலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேவேளை ஸ்டீவின் பதவி விலகல் ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சியின் தலைவர் மக் டேனியல் அறிவித்துள்ளார். கடந்த வருடமும் இதே போன்ற பாலியல் புகாரில், ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் அல் பிராங்கன், குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ட்ரெண்ட் பிராங்ஸ் ஆகிய இருவரும் பதவி விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Steve Wynn and second wife, Andrea Hissom, at President Trump’s inauguration
Mr Wynn has accused his ex-wife Elaine Wynn of instigating the claims, but her lawyer says it ‘is just not true’
The 76-year-old founder, chairman and chief executive officer of Wynn Resorts Ltd, has been a prominent figure in the casino resort business in Las Vegas. Casino billionaire Steve Wynn has resigned as finance chairman of the Republican National Committee (RNC) following allegations of sexual harassment and assault.