குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவிற்கு எதிராக கடுமையான தடைகள் பிறப்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி .மானுவல் மக்;ரோன் ( Emmanuel Macron ) கோரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான மனித உரிமை மீறல்களும் ஜனநாயக மீறல்களும் இடம்பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெனிசுலாவில் பிரதான எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்திலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பினைத் தொடர்ந்தே பிரான்ஸ் ஜனாதிபதி, வெனிசுலா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
வெனிசுலா அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடை விதித்துள்ளதுடன் சொத்துக்களையும் முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை விடவும் கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளார்.