நல்லாட்சி அரசாங்கத்தின் பணிகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புக்கொண்டுள்ளார். வாக்குறுதி அளித்த மாற்றங்களை அமுல்படுத்துவதில் சற்றே காலம் தாழ்த்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் நாட்டில் நிலவிய பீதி முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும், பல தசாப்த்தங்களாக மறுக்கப்பட்டு வந்த தனிப்பட்ட சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமாதானத்தையும் மாற்றத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புக்களை முழு அளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.