ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கின் மொசூல் உட்பட சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அவர்களுக்கெதிராக ஈராக் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப் படை வீரர்களும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும் எனினும் தவறுதலாக இலக்கு மாறி விமானங்கள் குண்டுகள் வீசியதாகவும் இதில் புலனாய்வுத் துறை சிரேஸ்ட அதிகாரி ஒருவரும் 5 காவற்துறையினர் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.