9-வது நோர்வே தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26-ம் திகதி முதல் 29-ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் விருது பெறும் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள், கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் சிறந்த படமாகவும் அப்படத்தின் இயக்குனர் கோபி நயினார் சிறந்த இயக்குனராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகராக விக்ரம் வேதா படத்திற்காக மாதவனும் சிறந்த நடிகையாக அருவி படத்தின் கதாநாயகி அதிதி பாலனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இசை அமைப்பாளராக விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சி.எஸ்.சாமும் சிறந்த பாடலாசிரியராக விவேக் (ஆளப்போறான் தமிழன், மெர்சல்) கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
சிறந்த தயாரிப்பாளராக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு (அருவி) வும் திரைக்கதைக்காக புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா) வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகராக வேலராமமூர்த்தி (தொண்டன், வனமகன்) யும் சிறந்த துணை நடிகையாக அஞ்சலி வரதன் (அருவி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
சிறந்த பாடகராக அனிருத் (யாஞ்சி யாஞ்சி)தும் சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷல் (நீதானே நீதானே) உம் சிறந்த எடிட்டராக ரேமண்ட் டெர்ரிக் க்ரஸ்டா (அருவி) வும் சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் (காற்று வெளியிடை) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்