Home பிரதான செய்திகள் ஐபிஎல் ஏலத்தில் இரண்டு முறை யாரும் ஏலம் கேட்காத நிலையில் கிறிஸ் கெய்லை வாங்கிய பிரீத்தி ஜிந்தா

ஐபிஎல் ஏலத்தில் இரண்டு முறை யாரும் ஏலம் கேட்காத நிலையில் கிறிஸ் கெய்லை வாங்கிய பிரீத்தி ஜிந்தா

by admin

ஐபிஎல் ஏலத்தில் இரண்டு முறை யாரும் ஏலம் கேட்காத நிலையில், 3-வது முறையாக பஞ்சாப் கிங்ஸ் லெவன் கிறிஸ் கெய்ல்-ஐ தன்வசமாக்கியுள்ளது. ஐபிஎல் வீரர்களின் மெகா ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் 12.5 கோடி ரூபா கொடுத்து வாங்கியது. அடுத்தப்படியாக 11.5 கோடி ரூபாய் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை வாங்கியிருந்தது.

துடுப்பாட்டக்காரர்கள் வரிசையில் இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ஓட்டங்களையும், அதிக சிக்சர்களும், அதிக சதங்களும் விளாசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரரும் சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படுபவரும் ஆன கிறிஸ் கெய்லின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட காலமாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த கிறிஸ் கெய்லை, அந்த அணி தக்க வைக்கவில்லை. விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்பராஸ் கான் ஆகியோரை தக்க வைத்திருந்தது.

நேற்றைய முதல் நாள் முக்கியமான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற அவரை எந்த அணி உரிமையாளர்களும் எடுக்கவில்லை. இரண்டு மூன்று சுற்றுகள் வந்த போதிலும் அவரை யாரும் எடுக்கவில்லை.  இந்தநிலையில் இன்றைய 2-வது நாளில் ஏலம் முடிவடைவதற்கு முன் மீண்டும் ஒருமுறை ஏலத்திற்கு வந்த போது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் சீசன் 2018-ல் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

38 வயதாகும் கிறிஸ் கெய்ல் 323 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20 சதங்கள், 67 அரைசதங்களுடன் 11068 ஓட்டங்களைக்; குவித்துள்ளார். இதில் 819 சிக்சர்களும், 835 பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More