குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானின் காபூல் இராணுவ பயிற்சி முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தாக்குதலில் மேலும் 16 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து தீவிரவாதிகளில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பினர் உரிமை யோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
காபூல் இராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்
Jan 29, 2018 @ 02:53
ஆப்கானிஸ்தானின் காபூல் இராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவ பயிற்சி முகாம் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்டசம் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன் 3 ராணுவ வீரர்கள் ; காயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
மார்சல் பாயீம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இராணுவ பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளின் வீதிகளை மூடி படையினர் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னதாக காபூலில் இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது